Latest Job Vacancies Updates..!

New Amendments to the Aswesuma 2024

Discover the latest amendments to the Aswesuma Welfare Benefit Scheme in 2024, approved by the government cabinet for enhanced effectiveness
Lanka Career
New Amendments to the Aswesuma 2024

Government Cabinet Approves Amendments to the Aswesuma Welfare Benefit Scheme

The Cabinet has approved the proposal submitted by the President as the Minister of Finance, Economic Stabilization and National Policies to implement the Aswesuma Welfare Benefit Scheme which is currently in effect with the following amendments.

Gazette of Aswesuma Welfare Benefits Payment Scheme (Tamil)

New updates :

தற்போது நடைமுறையில் உள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பளவுத் திட்டத்தை கீழ்க்காணும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


  1. அஸ்வெசும் பயனாளியாக தகைமை பெற்றவர்களில் இடர்களுக்கு உள்ளாகியுள்ள சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.04.01 தொடக்கம் 2024.12.31 வரைக்கும், நிலைமாறுநிலை (பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள) நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை 2024.01.01 தொடக்கம் 2024.12.31 வரைக்கும் நீடித்தல்.
  2. தற்போதுள்ள இடர்களுக்குள்ளாகிய சமூகப் பிரிவு மற்றும் நிலைமாறு சமூகப் பிரிவு (பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள) போன்ற இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து எட்டு இலட்சம் குடும்பங்களுக்காக இடர்களுக்கு உள்ளாகியுள்ள பிரிவாக 2024.01.01 தொடக்கம் கருத்தில் கொண்டும், குறித்த குடும்பங்களுக்காக 5000/- கொடுப்பனவை 2024.12.31 வரைக்கும் செலுத்தல்
  3. தகவல்களை உறுதிப்படுத்தும் செயன்முறையின் பின்னர் அஸ்வெசும குடும்பங்களின் பட்டியலில் காணப்படாத அடையாளங் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500/- ரூபாவும், மற்றும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500/- ரூபாவும், மற்றும் முதியோர்களுக்கு 3,000/- ரூபாவும் 2024 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மாதாந்தக் கொடுப்பளவு செலுத்தல்
  4. தற்போது கொடுப்பளவுகளைப் பெறுகின்றவர்களும், காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்களில் அடையாளங் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500/- ரூபாவும், மற்றும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500/- ரூபாவும், மற்றும் முதியோர்களுக்கு 3,000/- ரூபாவும் 2024.01.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டு இக்கொடுப்பனவுகளை அஸ்வெகம் வேலைத்திட்டத்திற்கு வெளியே மாவட்டச் செயலாளர்கள்/பிரதேச செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளல்.
  5. இரண்டாவது சுற்றுக்காக விண்ணப்பங்களைக் கோரல் 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 June மாதத்தில் நிறைவு செய்யப்பட்டு July மாதம் தொடக்கம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், மேலதிகமாக தகைமைகளை பெறுகின்ற குடும்பங்களை உள்வாங்குவதற்கும் தகைமை பெறுகின்ற குடும்பங்களின் மொத்த எண்ணிக்கையை உயர்ந்தபட்சம் 2.4 மில்லியன்களாகத் திருத்தம் செய்தல்.
Lanka Career
Hi...! I am Azam Mohamed. I'm the author of Lanka Career website. If you contact us please send to message from Support Center.
Comments